Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்!

ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்!

450
0
SHARE
Ad

 

Jayalalithaa-O.-Panneerselvam

சென்னை – (மலேசிய நேரம் நண்பகல் 12.40) அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் காண, தற்போது தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனை வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் ஜெயலலிதாவைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே, பல அமைச்சர்களும், அதிமுக ஆதரவாளர்களும் மருத்துவமனை முன்பாகக் குழுமியுள்ளனர்.

இதற்கிடையில், ஜெயலலிதா குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும், அவர் இன்று இல்லம் திரும்பக் கூடும் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

தமிழ் நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் அதிமுகவினர் ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

(மேலே படம் – ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர் செல்வம் – கோப்புப் படம்)