Home Featured நாடு பினாங்கு செய்தியாளரின் ஆவணப்படம் எம்மி விருதுக்குப் பரிந்துரை!

பினாங்கு செய்தியாளரின் ஆவணப்படம் எம்மி விருதுக்குப் பரிந்துரை!

753
0
SHARE
Ad

po1கோலாலம்பூர் – மலேசியாவின் பினாங்கில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் போ சி தெங் என்ற செய்தியாளர், உருவாக்கிய ஐஎஸ் பற்றிய ஆவணப்படம், நியூயார்க்கில் நடைபெறும் 37-வது ஆண்டு செய்தி மற்றும் ஆவணப்படங்களுக்கான எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறந்த நேர்காணல் பிரிவில், அவர் இயக்கிய ‘ஃபிலிர்டிங் வித் தி இஸ்லாமிக் ஸ்டேட் – Flirting With The Islamic State’ என்ற ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு நடைபெற்ற அறிமுக விழாவில், போ சிங் தெங், சிவப்பு நிறத்திலான பாரம்பரிய கெபாயா உடையில் காட்சியளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு, தான் மலேசியாவைச் சேர்ந்தவர் என்றும் பினாங்கில் பிறந்தவர் என்றும் தனது பேஸ்புக்கில் பெருமையுடன் கூறியுள்ளார் போ சிங் தெங்.

தற்போது அல்ஜசீரா செய்தி நிறுவனத்தில் தலைமைத் தயாரிப்பாளராகப் பணியாற்றி வரும் போ, இதற்கு முன்பு ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.