Home Featured நாடு மலேசியக் கப்பல் தீவிரவாதிகளுக்காக உரம் எடுத்துச் சென்றதா? – காலிட் விளக்கம்!

மலேசியக் கப்பல் தீவிரவாதிகளுக்காக உரம் எடுத்துச் சென்றதா? – காலிட் விளக்கம்!

513
0
SHARE
Ad

Khalid Abu Bakarபுத்ராஜெயா – இந்தோனிசியாவின் பாலியில் சிறை பிடிக்கப்பட்ட மலேசியக் கப்பலில் வெடிகுண்டு தயாரிப்பதற்காக 30 டன் உரங்கள் இருந்ததாகக் கூறப்படுவதை வைத்து, பொதுமக்கள் எந்த வித ஊகங்களுக்கும் வந்துவிட வேண்டாம் என தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

இந்தோனிசிய அதிகாரிகளுடன் மலேசிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த விவகாரத்தில் முழு அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.

ஊகத்தின் அடிப்படையில் தகவல்களைப் பரப்புவதால், நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று காலிட் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“எல்லா இடங்களிலும், உரங்களை கொண்டு செல்ல கப்பல்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதை ஒரு அசாதாரண விசயமாகக் கருத முடியாது. உரங்கள் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன” என்று காலிட் கூறியுள்ளார்.