Home Featured வணிகம் தீபாவளிக் கொண்டாட்டம் 2016: அஸ்ட்ரோ கலைஞர்களால் அதிரப் போகும் மேடை!

தீபாவளிக் கொண்டாட்டம் 2016: அஸ்ட்ரோ கலைஞர்களால் அதிரப் போகும் மேடை!

629
0
SHARE
Ad

Geethaகோலாலம்பூர் – அஸ்ட்ரோவின் மாபெரும் இரண்டாவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016, வரும் செப்டம்பர் 30 தொடங்கி, அக்டோபர் 2 வரை தொடர்ந்து, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளானில் (GM Klang Wholesale City) வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

அனைத்துலக அளவிலான இந்திய வர்த்தக விழா ஒருபுறம் இருக்க, அஸ்ட்ரோ தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர்களின் கலகலப்பான ஆட்டம், பாட்டம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளால் அம்மேடை அதிரவுள்ளது.

முதல் நாள் பிரம்மாண்ட அறிமுக விழாவில், அலிண்டா, சுஷ்மிதா, டேனிஸ், ஜோதி, ஹஸ்மிதா, சந்தேஷ், மதன், ஷாஷ்தன், இஆர்ஏ நடனக்குழுவினர் என பல கலந்து கொண்டு நிகழ்ச்சிகள் படைக்கவுள்ளனர்.

#TamilSchoolmychoice

குறிப்பாக, சந்தேஷ் மற்றும் அலிண்டாவின் அன்பிளக்டு (Unplugged) நிகழ்ச்சி மக்களுக்கு கொண்டாட்ட மனநிலையை உருவாக்கவுள்ளது.

இரண்டாம் நாள், தீபாவளிக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், கீதா, ரத்ன கௌரி, பாலகணபதி வில்லியம், அகிலா, ஷாமினி, பானுமிதா, ஐரிஸ், ஸ்ரீ, ஜெகதீசன், சிவகுமார், தினேஷ் ரூபன், டி அமோ நடனக்குழுவினர் பங்குபெற்று அவ்விழாவில் கலகலப்பாக்கவுள்ளனர்.

அதில் குறிப்பாக, இணையத்தில் மக்களின் தேர்வுகளின் அடிப்படையில் பாடல்களைப் பாடி மகிழ்ச்சிப் படுத்தவுள்ளனர்.

Anandhaமூன்றாம் நாள், டிஎச்ஆர் ராகா எல்லோரும் கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ராம், ஆனந்தா, உதயா, சுரேஸ், ரேவதி, மாறன், கீதா, யாஷினி, அகிலா, ஷாலு, ஜெய் மற்றும் டி அமோ நடனக்குழுவினரின் அசத்தலான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இவ்வாறு மூன்று நாட்களும், அஸ்ட்ரோ கலைஞர்களின் அற்புதமான நிகழ்ச்சிகளால் அம்மேடை அதிரப்போவதோடு, அங்கு கூடியிருக்கும் மக்களின் ஆரவாரத்தால், அப்பகுதியே உற்சாசாக மனநிலையை அடையவுள்ளது.

எனவே, அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016-ல் கலந்து கொண்டு இந்த ஆண்டு தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.