Home Featured தமிழ் நாடு தமிழக உள்ளாட்சி தேர்தல் : இன்று திங்கட்கிழமை முதல் வேட்புமனுத் தாக்கல்!

தமிழக உள்ளாட்சி தேர்தல் : இன்று திங்கட்கிழமை முதல் வேட்புமனுத் தாக்கல்!

626
0
SHARE
Ad

tamil-nadu-state-election-commissionசென்னை – தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 3-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி வேட்புமனுப் பரிசீலனை தொடங்கும் என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 6-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள்  நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும். வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 26-ஆம் தேதி தங்களின் பொறுப்புகளை அதிகாரபூர்வமாக ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.