Home Featured தமிழ் நாடு உள்ளாட்சித் தேர்தல் தடையை நீக்க மறுத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

உள்ளாட்சித் தேர்தல் தடையை நீக்க மறுத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

830
0
SHARE
Ad

chennai-high-courtசென்னை – உள்ளாட்சித்தேர்தல் இரத்துக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை, கடந்த அக்டோபர் 4-ம் தேதி விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித்தேர்தல் நடத்த தடை விதித்ததோடு, டிசம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரிக்கு தள்ளிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து,  உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று அக்டோபர் 5-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.