Home Featured உலகம் மேத்யூ சூறாவளி: கரிபியன் நாடுகளில் 269 பேர் பலி! அடுத்த குறி அமெரிக்கா!

மேத்யூ சூறாவளி: கரிபியன் நாடுகளில் 269 பேர் பலி! அடுத்த குறி அமெரிக்கா!

944
0
SHARE
Ad
  mathew-hurricane-haiti-usa
ஹைத்தி – நேற்று வியாழக்கிழமை கரிபியன் தீவு நாடுகளை நோக்கித் தாக்கிய மேத்யூ எனப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் சூறாவளி இதுவரை 269 பேர்களைப் பலி கொண்டுள்ளது.மிக மோசமாக தாக்கப்பட்ட நாடு ஹைத்தியாகும். இங்கு இதுவரை 108 பேர் இந்த சூறாவளிக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹாமாஸ், டொமினியன் ரிபப்ளிக், செயிண்ட் வின்சென்ட், கிரெனடின்ஸ் ஆகிய கரிபியன் தீவு நாடுகளையும் தாக்கியுள்ள மேத்யூ சூறாவளி தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலக் கடற்கரையைக் குறிவைத்து நகர்ந்துள்ளது.

புளோரிடா மாநிலத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.

அமெரிக்க கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து 3 மில்லியன் மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.