Home Featured தமிழ் நாடு உள்ளாட்சி தேர்தல் இரத்து – மேல்முறையீடு செய்தது தமிழக அரசு!

உள்ளாட்சி தேர்தல் இரத்து – மேல்முறையீடு செய்தது தமிழக அரசு!

1117
0
SHARE
Ad

chennai-high-court

சென்னை – உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மேல்முறையீடு செய்யப்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில  மணி நேரங்களுக்கு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை வியாழக்கிழமை அல்லது நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.