Home Featured உலகம் சிங்கப்பூர் மீன் காட்சியகத்தில் திருக்கை மீன் குத்தியதில் முக்குளிப்பாளர் மரணம்!

சிங்கப்பூர் மீன் காட்சியகத்தில் திருக்கை மீன் குத்தியதில் முக்குளிப்பாளர் மரணம்!

753
0
SHARE
Ad

underworld

சிங்கப்பூர் – சிங்கப்பூர் மீன் காட்சியகத்தில், முக்குளிப்பவர் ஒருவரை திருக்கை மீன் ( stingray) ஒன்று மார்பில் குத்தியதில், அவர் பலியானார்.

62 வயதான பிலிப் சான் என்ற முக்குளிப்பாளர் சிங்கப்பூரின் அண்டர்வாவாட்டர் வோர்ல்ட் என்றழைக்கப்படும் மீன் காட்சியகத்தில் (Underwater World Singapore) நேற்று செவ்வாய்க்கிழமை, அங்கிருந்த மீன்களை வேறு ஓர் இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அப்போது திருக்கை மீன் ஒன்று அவரது மார்பில் தனது முள்ளால் தாக்கியுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அன்றைய நாளே மரணமடைந்ததாக அந்த மீன் காட்சியகத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.