Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க இன்னொரு லண்டன் மருத்துவர்!

ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க இன்னொரு லண்டன் மருத்துவர்!

570
0
SHARE
Ad

jayalalithaசென்னை – கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், சென்னை அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, லண்டனில் இருந்து ரிச்சர்டு பீலே என்ற மருத்துவ நிபுணர் சிகிச்சையளித்து வந்தார்.

இந்நிலையில், அவரது சிகிச்சை ஜெயலலிதாவிற்கு சிறப்பாக வேலை செய்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக அப்போலோ அறிவித்தது.

முதற்கட்ட சிகிச்சை முடிந்து சில தினங்களுக்கு முன்பு லண்டன் சென்ற அவர், முதல்வரின் நெருங்கிய வட்டத்திலுள்ளோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நேற்று அவர் மீண்டும் சென்னை திரும்பினார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, மேற்சிகிச்சைக்காக மேலும் ஒரு சிறப்பு மருத்துவ நிபுணரை அப்போலோ நிர்வாகம் அழைத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் அப்போலோ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.