Home Featured தமிழ் நாடு உள்ளாட்சி தேர்தல் இரத்து – மேல்முறையீடு செய்யுமா தமிழக அரசு?

உள்ளாட்சி தேர்தல் இரத்து – மேல்முறையீடு செய்யுமா தமிழக அரசு?

799
0
SHARE
Ad

chennai-high-courtசென்னை – தமிழகத்தில் எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்வதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் மேல்முறையீடு செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் ஆணையம், அவசரகதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முறையான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறியும் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தேர்தலை இரத்து செய்வதாக உத்தரவிட்டது. மேலும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் தான், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில தேர்தல் ஆணையமும் மற்றும் தமிழக அரசும் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.