Home Featured உலகம் இந்தியா விலகலைத் தொடர்ந்து சார்க் மாநாடு இரத்து!

இந்தியா விலகலைத் தொடர்ந்து சார்க் மாநாடு இரத்து!

1054
0
SHARE
Ad

 

saarc-logo

இஸ்லாமாபாத் – பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த ‘சார்க்’ எனப்படும் தெற்கு ஆசிய வட்டார நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து, மற்ற நாடுகளும் சார்க் மாநாட்டைப் புறக்கணித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து சார்க் மாநாடு இரத்து செய்யப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.