Home Featured வணிகம் ஜிஎம் கிள்ளானில் டிஎச்ஆர் ராகா அறிவிப்பாளர்களின் நேரடி வெளி ஒலிபரப்பு!

ஜிஎம் கிள்ளானில் டிஎச்ஆர் ராகா அறிவிப்பாளர்களின் நேரடி வெளி ஒலிபரப்பு!

917
0
SHARE
Ad

uthayaகோலாலம்பூர் – நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City)-ன் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறும், அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016 நிகழ்ச்சியில், டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் சிறப்பு நேரடி வெளி ஒலிபரப்பு இடம்பெறும்.

இந்த நேரடி வெளி ஒலிபரப்பின் போது பல சுவாரசியமான பல விளையாட்டுப் போட்டிகளை ராகாவின் அறிவிப்பாளர்கள் ஏற்று நடத்தவுள்ளனர்.

ramமூன்று நாட்களுக்கு உங்களின் அபிமான அறிவிப்பாளர்களைச் சந்தித்து இப்போட்டியில் கலந்து கொண்டு அற்புதமான பரிசுகளைத் தட்டிச் செல்லும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள்.

#TamilSchoolmychoice

வெள்ளிக்கிழமை 30-ஆம் தேதி ஹைப்பர் மாலை நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் ராம் மற்றும் ரேவதி மாலை மணி 3 முதல் 6 மணி வரை இந்தச் சிறப்பு நேரடி வெளி ஒலிபரப்பைத் தொகுத்து வழங்குவார்கள்.

jayஅதுமட்டுமின்றி, மறுநாள் அக்டோபர் 1 மற்றும் 2-ஆம் தேதி காலை மணி 10 தொடக்கம் மதியம் 1 மணி வரை சிறப்பு நேரடி வெளி ஒலிபரப்பு இடம்பெறும். இதனை அறிவிப்பாளர் ஜெய், யாஷினி, கலக்கல் காலை அறிவிப்பாளர் ஆனந்தா மற்றும் உதயா முறையே தொகுத்து வழங்குவார்கள்.

ஆகவே, அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016-ல் கலந்து கொள்ள மறவாதீர்கள்.