Home Featured கலையுலகம் “7 வருடக் காதல் முறிந்தது” – காதலரைத் திட்டித் தீர்த்த வரலட்சுமி!

“7 வருடக் காதல் முறிந்தது” – காதலரைத் திட்டித் தீர்த்த வரலட்சுமி!

680
0
SHARE
Ad

varalakshmi_sarathkumar_imageசென்னை – “காதல் முறிவு இன்னும் கீழ்த்தரமாகிவிட்டது. 7 வருடக் காதலை முறித்துக் கொள்வதாக ஒருவர், தனது மேனேஜர் மூலம் சொல்லியனுப்பியிருக்கிறார். உலகம் எங்கே போகிறது? காதல் எங்கே?” – டுவிட்டரில் இப்படி ஒரு அதிர்ச்சியான தகவலைப் பதிவு செய்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்குமான நட்பு சினிமா வட்டாரங்களில் அனைவரும் அறிந்த ஒன்று. பல வருடங்களாக நண்பர்களாக இருந்த அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதை இருவருமே மறைமுறைகமாகவே சொல்லி வந்தனர்.

இந்நிலையில், வரலட்சுமியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், இப்போது கூறப்பட்டிருக்கும் இந்தக் காதல் முறிவு தகவலில் கூட, வரலட்சுமி அது விஷால் தான் என்பதை நேரடியாகச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.