இந்திய வர்த்தக விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்களை மகிழ்ச்சிபடுத்த பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது அஸ்ட்ரோ.
நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி தொடங்கி, மாலை 4 மணி வரை அப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அதுமட்டுமா? பேஷன் ஷோ, வானொலி விளம்பரங்களுக்கான பின்னணி குரல் தேடல், உள்ளிட்ட தேர்வுகளும் இடம்பெறவுள்ளன.
எனவே, நாளை செப்டம்பர் 30-ம் தேதி, தொடங்கி, அக்டோபர் 2-ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City)-ல் நடைபெறும் இந்திய வர்த்தக விழாவில் கலந்துகொண்டு பரிசுகளைத் தட்டிச் செல்லலாம்.
போர்ட் கிள்ளான் இரயில் நிலையத்தில் இருந்து ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டிக்குச் செல்ல இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் எளிதில் வர்த்தக விழா நடைபெறும் இடத்தை சென்றடையலாம்.