Home Featured நாடு பழனிவேல் அணியினரின் சங்கப் பதிவகம் மீதான வழக்கு!

பழனிவேல் அணியினரின் சங்கப் பதிவகம் மீதான வழக்கு!

662
0
SHARE
Ad

palanivel-mic

புத்ரா ஜெயா – முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் அணியினர் மஇகாவின் மறுதேர்தல்கள்- சங்கப் பதிவக முடிவுகள் தொடர்பில், சங்கப் பதிவகத்துக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.

சங்கப் பதிவகமும், மஇகா தலைமையகமும் இணைந்து சதியாலோசனை செய்து தங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டுகளுடன் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு கடந்த  ஜூலை 11-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யயப்பட்டது.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேல்முறையீடு, இன்று புத்ரா ஜெயாவில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு வருகின்றது.