Home Featured வணிகம் அஸ்ட்ரோ இந்திய வர்த்தக விழா 2016: செல்லியல் குறித்து அறிந்து கொள்ள எமது முகப்பிடத்தை அணுகவும்!

அஸ்ட்ரோ இந்திய வர்த்தக விழா 2016: செல்லியல் குறித்து அறிந்து கொள்ள எமது முகப்பிடத்தை அணுகவும்!

605
0
SHARE
Ad

Selliyal-App-Storesகோலாலம்பூர் – இன்று செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City)-ன் வாகன நிறுத்துமிடத்தில் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016 நிகழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ள முகப்பிடங்களில் (Booths) எண் 73-வது முகப்பிடத்தில், செல்லியல் குழுவினர் இருந்து, அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு செல்லியல் செய்தி இணையதளம் குறித்த விளக்கங்களையும், பதிவிறக்கம் குறித்த தகவல்களையும் அளிக்கவுள்ளனர்.

எனவே, செல்லியல் வாசகர்கள் எமது செல்லியல் செயலி பதிவிறக்கம் முதல் பயன்படுத்தும் விதங்கள் வரையிலான தகவல்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

#TamilSchoolmychoice