Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பிய பிரான்ஸ் தமிழச்சி மீது வழக்குப் பதிவு!

ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பிய பிரான்ஸ் தமிழச்சி மீது வழக்குப் பதிவு!

732
0
SHARE
Ad

tamilachi

சென்னை – பிரான்சைச் சேர்ந்த ‘தமிழச்சி’ என்ற பெண்மணி தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த தவறான கருத்துகளைப் பதிவு செய்து வந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ‘தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பதிவு மக்களை அதிரச் செய்தது.

#TamilSchoolmychoice

தனக்குக் கிடைத்துள்ள தகவலின் படி, அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வரும் ஜெயலலிதா, இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும், ஆனால் அதிமுக-வினர் அதனை மூடி மறைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழச்சி மீது அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் ராமச்சந்திரன், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தமிழச்சி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.