Home Featured வணிகம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

679
0
SHARE
Ad

petrol-pump

கோலாலம்பூர் – அக்டோபர் மாதம் (இன்று தொடங்கி) பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 மற்றும் 10 காசுகள் உயர்ந்துள்ளது.

ரோன்95 இரக பெட்ரோலின் விலை செப்டம்பரில் லிட்டருக்கு 1.70 காசுகள் இருந்த நிலையில், அக்டோபர் மாதம் அது 10 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 1.80 காசுகள் ஆகியுள்ளது.

#TamilSchoolmychoice

அதேவேளையில், லிட்டருக்கு 2.05 காசுகள் இருந்த ரோன்97 இரக எண்ணெய், 10 காசுகள் உயர்ந்து தற்போது 2.15 காசுகள் ஆகியுள்ளது.

லிட்டர் 1.70 காசுகள் என விற்பனை செய்யப்பட்ட டீசலின் விலை 1.75 காசுகளாக உயர்ந்துள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான இந்த புதிய விலைப் பட்டியலை முன்னாள் பெட்ரான் பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டத்தோ அலாங் ஜாரி இஷாக் உறுதிப்படுத்தியுள்ளார்.