Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் – அப்போல்லோ மருத்துவமனை அறிவிப்பு!

ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் – அப்போல்லோ மருத்துவமனை அறிவிப்பு!

630
0
SHARE
Ad

jayalalitha

சென்னை – அப்போல்லோ மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (மலேசிய நேரப்படி இரவு 10.30 மணியளவில்) விடுத்துள்ள அறிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் உடல் நிலையைக் கண்காணிக்கவும், மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும் இலண்டனில் உள்ள “கய்ஸ் அண்ட் செயிண்ட் தோமஸ்” (Guy’s and St Thomas Hospital, London)  மருத்துவமனையைச் சேர்ந்த அனைத்துலக மருத்துவ நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் பீல் (Dr Richard Beale) பிரத்தியேகமாக, ஜெயலலிதாவைப் பரிசோதிக்க இலண்டனில் இருந்து கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வரவழைக்கப்பட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

டாக்டர் ரிச்சர்ட் பீல், தமிழக முதல்வரின் பல்வேறு மருத்துவ அறிக்கைகளையும், அவரைக் கவனித்து வரும் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரின் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்து நீண்ட நேரம் அவர்களுடன் விவாதித்துள்ளார்.

அதன்பின்னர், தற்போது அப்போல்லோ மருத்துவமனையின் நிபுணத்துவ மருத்துவர் குழு வழங்கி வரும் நடப்பு சிகிச்சைகள் குறித்தும் அவை சரி எனவும் டாக்டர் ரிச்சர்ட் இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும் அப்போல்லோவின் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

டாக்டர் ரிச்சர்ட் பீல் தொடர்ந்து நடத்திய விரிவான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி மருந்துகள், அவை தொடர்பான மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தனக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து  நல்ல முறையில் பலன்கள் கிடைதுள்ளதாகவும், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் மேலும் சில நாட்கள் தங்கியிருக்க அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அப்போல்லோவின் மருத்துவ அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.