Home Featured தமிழ் நாடு கோவையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர் கைது!

கோவையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர் கைது!

833
0
SHARE
Ad

ISISsகோவை – தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கோயம்பத்தூரில், ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை, மத்திய காவல்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் முகாமிட்டு கண்காணித்து வந்த உளவுத்துறையினர், அங்கு பதுங்கியிருந்த மூவரை, நேற்று அதிகாலையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அந்நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நவாஸ் என்பவன், கோவை நகரிலுள்ள உக்கடம், ஜிஎம் நகரில் பதுங்கியிருப்பதை அறிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அதனையடுத்து, உடனடியாக அவனைப் பிடிக்க திட்டமிட்ட மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் தேசிய புலன்விசாரணை அமைப்பினர், நேற்று கோவை காவல்துறையினரின் உதவியுடன், அவன் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து அவனைப் பிடித்துள்ளனர்.

தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலைப் படிப்பு படிப்பதாக அந்நபர் கூறி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவனிடம் இருந்து செல்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய காவல்துறை, விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.