Home Featured நாடு சீன – முஸ்லிம்களை இணைக்கும் திட்டத்தில் ஐஎஸ் – புக்கிட் அம்மான் சந்தேகம்!

சீன – முஸ்லிம்களை இணைக்கும் திட்டத்தில் ஐஎஸ் – புக்கிட் அம்மான் சந்தேகம்!

1064
0
SHARE
Ad

bukit-amanஈப்போ – ஐஎஸ், தங்கள் அமைப்பில் சீன – முஸ்லிம்களை சேர்க்கத் திட்டமிட்டு வருவதாக, புக்கிட் அம்மான் நம்புகிறது.

ஐஎஸ் இணையதளங்களில் மதம் சம்பந்தப்பட்ட பாடல்கள், சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்பட்டு வருவதை அடிப்படையாக வைத்து புக்கிட் அம்மான் சிறப்புப் பிரிவு சந்தேகம் கொள்கிறது.

இது குறித்து புக்கிட் அம்மான் சிறப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் டான் கோக் தியான் கூறுகையில், “பயங்கரவாத அமைப்பில் மலேசிய சீனர்கள் யாரும் இல்லை என்றாலும் கூட, அவர்களின் அது போன்ற திட்டங்களை நாம் அவ்வளவு லேசாக எடுத்துக் கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice