Home Featured நாடு புக்கிட் தாபுரில் தவறி விழுந்து மலையேற்ற வீரர் மரணம்!

புக்கிட் தாபுரில் தவறி விழுந்து மலையேற்ற வீரர் மரணம்!

574
0
SHARE
Ad

tabur1-transformed_0கோலாலம்பூர் – அம்பாங்கிலுள்ள பிரபல மலையேறும் இடமான புக்கிட் தாபுரில் இன்று திங்கட்கிழமை மலையேற்ற வீரர் ஒருவர், 20 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்ததில் மரணமடைந்துள்ளார்.

கிள்ளானைச் சேர்ந்த கோ செங் தேக் (வயது 49) என்ற அவர், மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் வழியில் தவறி விழுந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

இதனால் தலையில் பல இடங்களில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தகவலறிந்த அம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

மலையேற்ற வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இடமான புக்கிட் தாபுரில் இதற்கு முன்பு இது போல் பல மரண சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.