Home Featured உலகம் ஜப்பானியர் யோஷிநோரி ஓசுமி மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்!

ஜப்பானியர் யோஷிநோரி ஓசுமி மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்!

1022
0
SHARE
Ad

yoshinori-ohsumi

ஸ்டோக்ஹோம் – 2016-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளன. இந்த ஆண்டுக்கான முதல் நோபல் பரிசு, மருத்துவத்துக்காக, ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானி யோஷிநோரி ஓசுமி (படம்)  என்பவருக்கு, இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

உயிர் அணுக்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் மூலம் ஓசுமி மருத்துவ உலகுக்கு வழங்கியுள்ள கண்டுபிடிப்புகள், அல்சைமர் மற்றும் கேன்சர் போன்ற நரம்பு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

வழக்கமாக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுகள் கூட்டாக சிலருக்கு வழங்கப்படும். ஆனால், இந்த முறை தனி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.1901-ஆம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் இதுவரை 39 பேருக்கு மட்டுமே மருத்துவத்துக்கான நோபல் பரிசுகள் தனி நபராக ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

nobel-prize-symbolநோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபல் திருவுருவச் சிலை…

ஜப்பானின் புக்குவோக்கா நகரில் பிறந்த ஓசுமி தோக்கியோ பல்கலைக் கழகத்தில் 1974-இல் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றார். அதற்கு முன்பாக நியூயார்க்கின் ராக்பெல்லர் பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பின்னர் தோக்கியோ பல்கலைக் கழகம் திரும்பிய அவர் 1988 ஆண்டு முதல் ஆராய்ச்சி குழு ஒன்றை நிறுவி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். 2009 முதல் தோக்கியோ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

இது தான் சற்றும் எதிர்பார்க்காத  விருது என்றும் ஓசுமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நாளை செவ்வாய்க்கிழமை பௌதிகத்துக்கான நோபல் பரிசும், இராசயனத்துக்கான பரிசு புதன்கிழமையும் அறிவிக்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், அக்டோபர் 13-ஆம் தேதி இலக்கியத்துக்கான பரிசும் அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான  நோபல் பரிசுகளின் மதிப்பு 8 மில்லியன் குரோனர்கள் ஆகும். அதாவது ஏறத்தாழ 3,720,000 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

வெடிகுண்டைக் கண்டுபிடித்த சுவீடன் நாட்டின் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் தனது கண்டு பிடிப்பின் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு நோபல் பரிசுகளை நிறுவினார்.