மேலும், அல்தான்துயா கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி அன்று, தான் கோலாலம்பூரிலுள்ள இஸ்லாமிய ஆதரவற்றோர் நலன் சங்கத்தில் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, அன்று நள்ளிரவு வரை அங்கு தான் இருந்ததாகவும், அதை நேரில் பார்த்த சாட்சிகள் ஏராளமானவர்கள் உள்ளனர் என்றும் அந்த சுயசரிதையில் 140 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு பல்லிகள் என்றால் கூட பயம் என்றும், மேலும் இருட்டு என்றால் மிகவும் பயம் என்றும், தான் எப்படி அந்த இரவில் கொலை நடந்த மலைக்குச் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக புக்கிட் அமானில்,தான் ஆறு மணிநேரம் விசாரணை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.