ஆர்யா மற்றும் டாப்சியும் இதில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.
படத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடும் காட்சி இடம்பெறுகிறது. அதை மும்பையிலேயே படமாக்க இயக்குனர் திட்டமிட்டார். இதற்காக அங்கு ‘செட்’ போடப்பட்டது.
வண்ணப்பொடி பெட்டி பெட்டியாக கொண்டு வரப்பட்டது. அஜீத்தும், நயன்தாராவும் வண்ணப்பொடியை ஒருவர் மீது ஒருவர் வீசி ஆடினார்கள். நிறைய துணை நடிகர் நடிகைகளும் வண்ணப்பொடி தூவினார்கள்.
நிஜத்தில் ஹோலி கொண்டாடியது போலவே அது இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த பாடலை இம்மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
உச்சக்கட்ட (கிளைமாக்ஸ்) காட்சி மட்டும் மீதம் உள்ளது. அதை முடித்துவிட்டு அடுத்த மாதம் ஏப்ரல் 1-ந்தேதி படத்தை வெளியிடச் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.