Home Featured நாடு பிரிமியர் லீக் காற்பந்து போட்டிகளுக்கு மிபா தேர்வு – வரலாறு படைத்தது!

பிரிமியர் லீக் காற்பந்து போட்டிகளுக்கு மிபா தேர்வு – வரலாறு படைத்தது!

690
0
SHARE
Ad

ஷா ஆலாம் – மலேசிய இந்தியர் காற்பந்து சங்கமான எம்ஐஎஸ்சி மிபா (MIFA) நேற்று ஷா ஆலாம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பலம் பொருந்திய ஏர் ஆசியா காற்பந்து குழுவை 1-0 கோல் எண்ணிக்கையில் தோற்கடித்ததன் மூலம் அடுத்த ஆண்டு முதல் பிரிமியர் லீக் எனப்படும் மலேசிய காற்பந்து போட்டிகளில் பங்கு பெறும் தகுதியைப் பெற்று வரலாறு படைத்துள்ளது.

mohan-t-tony-fernandez-mifa

நேற்று நடைபெற்ற மிபா-ஏர் ஆசியா குழுக்களுக்கு இடையிலான காற்பந்து போட்டிக்கு வருகை தந்த ஏர் ஆசியா தலைவர் டோனி பெர்னாண்டசுடன் டி.மோகன்…

#TamilSchoolmychoice

மிபாவுக்குத் தலைமை தாங்கும் டத்தோ டி.மோகன் இது குறித்து கருத்துரைக்கும்போது, “நாம் முதன் முறையாக பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பெறப் போவதன் மூலம் வரலாறு படைத்துள்ளோம். இதற்காகப் பாடுபட்ட மிபா விளையாட்டாளர்கள், நிர்வாகிகள், நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள் என அனைவருக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

அனைவரின் கூட்டு முயற்சியாலும், குழு மனப்பான்மையோடு இயங்கியதாலும் இந்த வெற்றியைப் பதிவு செய்ய முடிந்ததாகவும் மோகன் மேலும் தெரிவித்துள்ளார்.

மோகன் மஇகாவின் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவருமாவார்.

மிபா காற்பந்து குழுவின் அடுத்த இறுதி ஆட்டம் பிகேஎன்பி குழுவுடன் அக்டோபர் 20 மற்றும் 27-ஆம் தேதிகளில்நடைபெறும் என்றும் மோகன் தெரிவித்துள்ளார்.

mifa-finals-premier-league-mohan-tony-fernandez

மிபா-ஏர் ஆசியா இடையிலான போட்டியைக் காணவந்த டோனி பெர்னாண்டசுடன் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், டத்தோ டி.மோகன் மற்றும் மிபா நிர்வாகிகள்