சிலாங்கூர், கிளந்தான், பேராக், கெடா, புலாவ் பினாங்கு மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது 20 முதல் 38 வயது வரையிலான வயதையுடைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
சிரியா ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ள மலேசியர் முகமட் வான்டி மொகமட் ஜெட்டி தலைமையில் ‘காகாக் ஹித்தாம்’ என்ற இயக்கத்தில் அந்த 14 மலேசியர்களும் இணைந்திருப்பதாகவும், கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 20 வயதான ஒருவர், ஜோகூரில் பொதுப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்ததாகவும் காலிட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி, சிலாங்கூரில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 32 வயது நபர், சிரியாவின் ஜாஹ்பட் அல் நுர்சா என்ற அமைப்பில் இணைந்தவர் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.