Home Featured வணிகம் விஜய் மல்லையாவின் கோவா பங்களா வரும் அக் 19-ம் தேதி ஏலம்!

விஜய் மல்லையாவின் கோவா பங்களா வரும் அக் 19-ம் தேதி ஏலம்!

1063
0
SHARE
Ad

vijay mallaiya

புதுடெல்லி – வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தாமல், தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கோவா கடற்கரை சொகுசு பங்களா வரும் அக்டோபர் 19–ந்தேதி ஏலம் விடப்படுகிறது.

பங்களாவை ஏலத்தில் எடுக்க பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 6 ஓட்டல் துறை மற்றும் ஒரு ஊடகத்துறையை சேர்ந்த பிரபலங்கள் இந்த சொகுசு பங்களாவை பார்த்து சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பங்களாவுக்கு ஆரம்ப விலையாக ரூ.85 கோடியே 29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரை விஜய் மல்லையாவின் எந்த சொத்துகளையும் ஏலம் எடுக்க யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், இந்த சொகுசு பங்களா நிச்சயம் நல்ல விலைக்கு போகும் என்று வங்கிகள் எதிர்பார்ப்புடன் உள்ளன.