Home Featured நாடு ‘பெர்சே பேரணியை சிவப்புச் சட்டையினரால் தடுக்க முடியாது’ – மரியா

‘பெர்சே பேரணியை சிவப்புச் சட்டையினரால் தடுக்க முடியாது’ – மரியா

554
0
SHARE
Ad

Maria Chin Abdullah

ஜார்ஜ் டவுன் – சிவப்புச் சட்டை அமைப்பினரிடமிருந்து பல்வேறு மிரட்டல்கள் வந்தாலும் கூட, பெர்சே 5 பேரணி கண்டிப்பாக நடக்கும் என்று பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

எனினும், பெர்சே பேரணி நடைபெறவிருக்கும் இடம் குறித்து சரியான நேரம் வரும் போது மட்டுமே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“திட்டமிட்டபடி பேரணியை நடத்துவோம். நமக்கென்று தனியாக ஒரு பாதுகாப்புக் குழு இருக்கின்றது. பேரணி அமைதியாக நடைபெற காவல்துறையிடமிருந்தும் நாம் உதவியைப் பெறுவோம் என்று நம்புகிறோம்” என்று மரியா தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பெர்சே 5 பேரணியை நிறுத்தக் கூறி, சிவப்புச் சட்டை அணியினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக பெர்சே கூறுவது குறிப்பிடத்தக்கது.