Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா உடல்நலக்குறைவுக்கு பின்னணியில் சதியா? – சிபிஐ விசாரணை கோரும் சசிகலா புஷ்பா!

ஜெயலலிதா உடல்நலக்குறைவுக்கு பின்னணியில் சதியா? – சிபிஐ விசாரணை கோரும் சசிகலா புஷ்பா!

593
0
SHARE
Ad

sasikala-pushpaசென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையின் உண்மை நிலவரத்தை அறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா புஷ்பா எழுதி இருந்த கடித்ததில், ”முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை சுற்றி இருப்பவர்கள் அவருடைய கையெழுத்தை மோசடி செய்து பயன்படுத்தி, துணை பொதுச் செயலாளரை நியமித்து, அரசையும் இயக்க முயற்சிக்கலாம். முதல்வர் பெயரில் எதாவது அதிகாரபூர்வ அறிவிப்புகள், அறிக்கைகள் வெளியானால், அவற்றில் இடம் பெற்று இருக்கும் கையெழுத்து முதல்வருடையதுதானா? என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்ததற்குப் பின்னணியில் சதி இருக்கலாம் என்பதால், சிபிஐ விசாரணை வேண்டும் என்று சசிகலா புஷ்பா கோரிக்கை வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice