Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவைக் காண கேரளா, புதுசேரி மாநிலத் தலைவர்கள் வருகை!

ஜெயலலிதாவைக் காண கேரளா, புதுசேரி மாநிலத் தலைவர்கள் வருகை!

883
0
SHARE
Ad

pinarayi-vijayanசென்னை – அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள கடந்த சில நாட்களாக பல முக்கியத் தலைவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள ஆளுநர் சதாசிவம் ஆகியோர் அப்போலோவிற்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற கேரள மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி அப்போலோவிற்கு வருகை புரிந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்டார்.

அது குறித்து கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறினார்கள். முதல்வர் பூரண நலம் பெற விரும்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.