Home Featured நாடு அன்வாரின் மறுஆய்வு மனு: தீர்ப்பை ஒத்தி வைத்தது கூட்டரசு நீதிமன்றம்!

அன்வாரின் மறுஆய்வு மனு: தீர்ப்பை ஒத்தி வைத்தது கூட்டரசு நீதிமன்றம்!

629
0
SHARE
Ad

????????????????????புத்ராஜெயா – ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்யும் படி, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் முடிவை கூட்டரசு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

நீதிமன்றம் அதன் முடிவை இன்னொரு தேதியில் அறிவிக்கும் என இன்று புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிபதி மலாயா சுல்கிப்ளி அகமட் மாகினுடின் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓரினப்புணர்ச்சி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிலைநிறுத்தும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை மறுஆய்வு செய்யும்படி அன்வார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

தற்போது சுங்கை பூலோ சிறையில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வாரின் மனு வெற்றியடைந்தால், அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, வரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.