பானாஜி – இன்று சனிக்கிழமை கோவாவில் துவங்கிய பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா- ரஷியா இடையிலான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியப் பிரதமர் விளாடிமிர் புதின் ஆகியோர் முன்னிலையில் 16 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.
பாதுகாப்பு, கல்வி, எரிசக்தி, திறன் நகரம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளோடு, இந்திய இராணுவத்திற்காக, போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை வாங்கவும், இந்தியாவில் தயாரிக்கவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.