சென்னை – காவிரி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடத்த, நாளை அக்டோபர் 25-ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு எதிர்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை, ஆளும் கட்சி கூட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும், அனைத்து விவசாய சங்கங்களுக்கும் ஸ்டாலின் தனித்தனியே கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஸ்டாலினின் இந்த அழைப்பிற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சுயலாப நோக்கத்திற்காக ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் என கருணாஸ் சாடியுள்ளார்.
இது குறிக்கு கருணாஸ் கூறியிருப்பதாவது:
“தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு உள்ள நற்பெயரினை திசை திருப்ப ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அவரின் சுயலாபத்திற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுகிறார்”
“காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தங்களுடைய ஆட்சியிலும், தோழமை கட்சியின் ஆட்சியிலும் திமுக ஏன் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை” என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.