Home Featured வணிகம் சென்னை – சிங்கப்பூர் இடையே தொடர் விமானச் சேவைகள் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

சென்னை – சிங்கப்பூர் இடையே தொடர் விமானச் சேவைகள் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

922
0
SHARE
Ad

air-india-ap-480சென்னை – சென்னை – சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு 5 நிறுத்தமில்லா (Non – Stop) விமானச் சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வழங்கவுள்ளது.

இச்சேவைகள் வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது, இந்த புதிய சேவையின் படி, இந்திய நேரப்படி, சென்னையில் காலை 7 மணியளவில் புறப்படும் விமானம், சிங்கப்பூர் நேரப்படி மதியம் 1.40-க்கு சாங்கி விமான நிலையத்தை அடையும்.

#TamilSchoolmychoice

அதே விமானம் மீண்டும், அங்கிருந்து சிங்கப்பூர் நேரப்படி 2.40 மணிக்கு சென்னையை நோக்கிப் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 5 முறை இந்த விமானச் சேவை வழங்கப்படவுள்ளதாகவும அந்நிறுவனம் அறிவித்துள்ளது.