Home Featured உலகம் “பாலியல் ரீதியாக அணுகினார்! 10 ஆயிரம் தருவதாகக் கூறினார்” டிரம்ப் மீது 11-வது பெண் புகார்!

“பாலியல் ரீதியாக அணுகினார்! 10 ஆயிரம் தருவதாகக் கூறினார்” டிரம்ப் மீது 11-வது பெண் புகார்!

882
0
SHARE
Ad

jessica-drake-donald-trump-us-presidential-election

லாஸ் ஏஞ்சல்ஸ் –  ஏற்கனவே நொறுங்கிப் போயிருக்கும் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரங்கள் தற்போது மேலும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளன.

இதுவரை 10 பெண்கள் முன்வந்து டொனால்ட் டிரம்ப் மீதான பாலியல் புகார்களை அடுக்கி வைத்து, அவர் மீதான தோற்றத்தைச் சிதைத்திருக்கும் நிலையில், 11-வது பெண்மணி ஒருவர் முன்வந்து டிரம்ப் 10 வருடங்களுக்கு முன்னால், தன்னை முறைகேடான முறையில் தொட்டதாகவும், தன்னை அனுமதியின்றி முத்தமிட்டதாகவும், நேற்று கூறியுள்ளார். நெவாடா மாநிலத்தில் உள்ள தாஹோ ஏரிப் பகுதியில் 2006-இல் நடந்த அறக்கட்டளைக்கான கோல்ப் விளையாட்டுப் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்ததாக அவர் விவரித்துள்ளார்.

#TamilSchoolmychoice

donald-trump-jessica-drake-us-presidential-election

ஜெசிகா டிரேக் டிரம்புடன் இருக்கும் படத்தைக் காட்டுகின்றார் அவரது வழக்கறிஞர். கண்ணாடியுடன் கறுப்பு ஆடையில் இருப்பவர்தான் ஜெசிகா டிரேக்

ஜெசிகா டிரேக் என்ற அந்த பெண்மணி காமப் படங்களில் நடிக்கும் நடிகை என்பதும் அத்தகைய படங்களை இயக்குபவர் என்பதும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.

ஏற்கனவே, பெண்களை தொட்டுப் பிடிப்பேன், முத்தமிடுவேன் என டிரம்ப் பெருமையுடன் பேசிக் கொள்ளும் உரையாடல் பதிவுகள் வெளியாகி, அதைத் தொடர்ந்து ஏறத்தாழ 10 வெவ்வேறு பின்னணியைக் கொண்ட பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார்களைச் சுமத்தியுள்ளனர்.

2006-இல் தன்னைச் சந்தித்த டிரம்ப் தன்னை அவரது தங்கும் விடுதியின் அறைக்கு அழைத்ததாகவும், மேலும் 2 பெண்களுடன் அங்கு சென்றதாகவும், காரணம், தனியாக செல்ல தனக்கு அசௌகரியமாக இருந்தது என்றும் டிரேக் தனது வழக்கறிஞருடன் வழங்கிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“அப்போது டிரம்ப் என்னை இறுகக் கட்டியணைத்து என்னையும், என்னுடன் வந்த பெண்களையும் எங்களின் அனுமதியின்றி முத்தமிட்டார். சுமார் 30 முதல் 45 நிமிடங்களுக்குப் பின்னர் நாங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டோம். அதன் பின்னர் டிரம்பின் பிரதிநிதி ஒருவர் என்னைத் தனியாக வரச் சொன்னார். டிரம்புடன் இரவு விருந்தில் கலந்து கொள்வதற்கும், அவரது தனிப்பட்ட விமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் என்னிடம் கூறினார். அதற்காக எனக்கு 10,000 டாலர் தருவதாகவும் டிரம்பின் பிரதிநிதி கூறினார்” என்றும் டிரேக் அடுக்கடுக்காக புகார் கூறியுள்ளார்.

டிரம்புடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் டிரேக் பத்திரிக்கையாளர்களிடம் காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் மிக நெருங்கி வரும் வேளையில், டிரம்பின் செல்வாக்கு மேலும் மோசமாக சரியும் என்றும் – குறிப்பாக பெண் வாக்காளர்களின் ஆதரவு கிடைக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.