Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவின் நலம் விசாரிக்க அப்போல்லோ வந்த வைரமுத்து!

ஜெயலலிதாவின் நலம் விசாரிக்க அப்போல்லோ வந்த வைரமுத்து!

720
0
SHARE
Ad

vairamuthu9-600

சென்னை – அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, தமிழகத்தின் பிரபலங்களையும், அகில இந்திய அளவில் முக்கியத் தலைவர்களையும் அங்கு படையெடுக்க வைத்திருக்கின்றார். அதே வேளையில், சில எதிர்பாராத, வருகையாளர்களும் தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தை விளைவிக்கும் வகையில் அப்போல்லோவுக்கு வந்து சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கவிப் பேரரசு வைரமுத்து. ஜெயலலிதாவுக்கு எதிராக எந்தவித அறிக்கையும் இதுவரை விடாதவர் என்றாலும், அவருக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இருக்கும் நெருக்கமும் நட்பும், ஊரறிந்ததுதான். அதன் காரணமாக, திமுக வட்டாரங்களில் அரசியல் ரீதியாகவும் நெருக்கமானவர்.

#TamilSchoolmychoice

அந்த வகையில் இதுநாள் வரையில் ஜெயலலிதாவைப் பற்றி எதுவும் கூறாமல் இருந்து வந்த வைரமுத்து நேற்று வியாழக்கிழமை அப்போல்லோவுக்கு வருகை தந்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், “மருத்துவ பலத்தாலும், மனோபலத்தாலும் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வருவார்” என்று கூறியுள்ளார்.

“முதல்வர் என்ற முறையிலும், கலைத் துறையின் மூத்த கலைவாணி என்ற முறையிலும், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தேன். அவர் நலமாக இருப்பதாக நண்பர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். போராட்டங்களால் சூழப்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் முதல்வர் ஜெயலலிதா. மருத்துவ பலத்தாலும், மனோபலத்தாலும் அவர் மீண்டு வருவார். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துகள்” என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

அப்போல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து 36 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு, அப்போல்லோவின் உயர்மட்ட மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வரும் வேளையில், இலண்டனிலிருந்து இரண்டு மருத்துவர்கள், புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள், சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் ஆகியோரும் அவருக்கான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.