Home Featured உலகம் இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டிடங்கள் சரிந்தன!

இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டிடங்கள் சரிந்தன!

755
0
SHARE
Ad

italyரோம் – ரோம் நகருக்கு 132 கிமீ வடகிழக்கேயும் பெருகியாவுக்கு 67 கிமீ கிழக்கிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 36 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் இத்தாலியை உலுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியது போது மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே ஓடி வந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிங்கள் சரிந்துள்ளன என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவத்தில் 20 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது இன்னும் உறுதியாகவில்லை.