Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா குணமடைந்துவிட்டார் – அப்போலோ தலைவர் அறிவிப்பு!

ஜெயலலிதா குணமடைந்துவிட்டார் – அப்போலோ தலைவர் அறிவிப்பு!

732
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் அபாயக் கட்டங்களைத் தாண்டி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஜெயலலிதா தனக்கான உணவைத் தானே கேட்டுப் பெறுவதாகவும், சுற்றி நடப்பவற்றை நன்கு உணர்வதாகவும் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.