Home Featured உலகம் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிரடி திருப்பம் – டிரம்ப், ஹிலாரி இழுபறி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிரடி திருப்பம் – டிரம்ப், ஹிலாரி இழுபறி!

661
0
SHARE
Ad

Donald Trump-US Presidential candidate

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகின்றார். வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக, டொனால்ட் டிரம்ப் இன்று காலை முதல் முன்னிலை வகித்து வருகின்றார்.

ஆனால், 55 தேர்தல் வாக்குகளைக் கொண்ட கலிபோர்னியா மாநிலத்தில் ஹிலாரி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து தற்போது, குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் ஹிலாரி முந்திக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசிய நேரம்  12.20 வரையிலான கணக்கெடுப்பின்படி ஹிலாரி 197 தேர்தல் வாக்குகளும், டிரம்ப் 187 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஹிலாரி வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புளோரிடா மாநிலத்தில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளது எதிர்பாராத அதிர்ச்சியாகவும், டிரம்ப் முன்னிலை வகிப்பதற்கான ஒரு காரணமாகவும் பார்க்கப்படுகின்றது.

வெற்றி பெறுவதற்கு 270 தேர்தல் வாக்குகள் தேவைப்படுகின்றன. சில பெரிய மாநிலங்களின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதால், இறுதி நேரத்தில் நிலைமை மாறக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

இருப்பினும், ஆசியர்கள், கறுப்பர்கள், முஸ்லீம்கள், லத்தினோ எனப்படும் தென் அமெரிக்கர்கள் ஆகியோருக்கு எதிரான நிலைப்பாட்டுடன் டிரம்ப்  பிரச்சாரம் செய்தது அவருக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளதாக முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒபாமா பதவிக் காலம் முடிந்ததால், கறுப்பர்கள் அதிக அளவில் வெளிப்பட்டு வாக்களிக்கவில்லை என்றும் ஹிலாரியின் இறங்கு முகத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.

பாரம்பரிய அமெரிக்காவைப் பாதுகாக்க வேண்டும், வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களோடு நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் மயங்கி வெள்ளையர்கள் திரண்டு வந்து டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தது அதிரடி மாற்றத்திற்கான காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.