ஷா ஆலாம், மார்ச்.20- பபகொமோ (Papagomo) என்ற பெயரிலான தனது இணையத் தளப் பக்கத்தில் கடந்த 16.3.2013 ஆம் தேதி அன்வாரைப் போன்று தோற்றமளிக்கும் ஒருவருடைய புகைப்படத்தை வெளியிட்டதற்காக,வான் முகமட் அஸ்ரி முகமட் டெரிஸ் என்ற அந்த இணையத் தள எழுத்தாளர் மீது எதிர்க்கட்சி தலைவராகிய அன்வார் இப்ராகிம் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
அன்வாரின் வழக்கறிஞர் 48 மணி நேரத்தில் அன்வாரின் மீது சுமத்தப்பட்ட அவதூறைத் திரும்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்குமாறு முகமட் அஸ்ரியிடம் உத்தரவிட்டதாக பி.கே.ஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையின் வழி தெரிவித்தார்.
அன்வாரின் வழக்கறிஞர் இந்த செய்தியைப் பிரசுரித்ததற்கு இதற்கான நஷ்ட ஈடாக முகமட் அஸ்ரி 100 மில்லியன்களை வழங்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளர்.
“என் மீது அவதூறு சுமத்திய குற்றத்திற்காக அம்னோவுடன் மிகுந்த தொடர்பு கொண்ட பபகோமோ மீது எனது வழக்கறிஞர்கள் குழு மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பேன் ” என்று அன்வார் நேற்று டிவிட்டர் என்ற இணைய வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.