Home Featured நாடு பக்காத்தான் ஹராப்பானில் இணைந்தது மகாதீரின் பெர்சாத்து கட்சி!

பக்காத்தான் ஹராப்பானில் இணைந்தது மகாதீரின் பெர்சாத்து கட்சி!

732
0
SHARE
Ad

ஷா ஆலாம் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் எதிர்க் கட்சிக் கூட்டணி மாநாட்டில் மகாதீர்-மொகிதின் யாசின் தலைமையில் உருவாகியிருக்கும் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சி இணைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற மாநாடு இந்தக் கூட்டணியின் முதலாவது மாநாடாகும்.

pakatan-harapan-convention-leadersபக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில் தலைவர்கள் – அன்வார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் தொடங்கினார்கள்…

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, அந்தக் கட்சியை அதிகாரபூர்வமாக இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, பிகேஆர், அமானா, ஜசெக ஆகிய மூன்று கட்சிகள் பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் இயங்கி வருகின்றன. தற்போது நான்காவது கட்சியாக பார்ட்டி பிரிபூமி இணைந்துள்ளது.

பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி இந்த முறை ஒரே பொதுவான சின்னத்தின் கீழ் போட்டியிடும் எனவும் அஸ்மின் அலி அறிவித்திருந்தார்.

தேசிய முன்னணியின் வெற்றிக்கான காரணம், அந்தக் கூட்டணி ஒரே பொது சின்னத்தின் கீழ் போட்டியிடுவதுதான் என மகாதீர் அண்மையில் கூறியிருந்தார்.

wan-azizah-pakatan-harapan-convention-2016

பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில் உரையாற்றுகிறார் பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா….