Home Featured இந்தியா பழைய 500, 1000 ரூபாய்களைப் பயன்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

பழைய 500, 1000 ரூபாய்களைப் பயன்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

753
0
SHARE
Ad

1000-rupees-noteபுதுடில்லி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் நவம்பர் 24-ம் தேதி நள்ளிரவு வரையில், பழைய 500, 1000 ரூபாய் தாள்களைப் பயன்படுத்த கால அவகாசம் வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி, அரசாங்க மருத்துவமனைகள், பெட்ரோல் நிரப்பும் இடங்கள் ஆகியவற்றில் வரும் நவம்பர் 24-ம் தேதி நள்ளிரவு வரையில் பழைய ரூபாய் தாள்களைக் கொடுத்துப் பயன்படுத்தலாம் என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.