Home Featured இந்தியா சசி தரூர் புதிய நூலை மோடியிடம் வழங்கினார்!

சசி தரூர் புதிய நூலை மோடியிடம் வழங்கினார்!

1001
0
SHARE
Ad

narendra-modi-sashi-tharoor

புதுடில்லி – இந்தியாவின் குறிப்பிடத்தக்க அறிவாற்றல் மிகுந்த ஆளுமைகளில் முக்கியமானவர் சசி தரூர். ஐக்கிய நாடுகள் மன்றத்தில் துணை தலைமைச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர். ஐநாவின் தலைமைச் செயலாளராக தேர்வு பெறும் அளவுக்கு அனைத்துலக விவகாரங்களில் ஆற்றல் வாய்ந்தவராகக் கருதப்படுபவர்.

தற்போது திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சசி தரூர் முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது இணை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

#TamilSchoolmychoice

இதுவரை 16 நூல்களை எழுதியிருக்கும் அவர் அண்மையில் எழுதி வெளியிட்டிருக்கும் நூல் “இருண்ட காலகட்டம் – இந்தியாவில் பிரிட்டிஷ்  ஆட்சி” (Era of Darkness – The British Empire in India) என்ற தலைப்பிலான ஆங்கில நூல்,

அந்த நூலை நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வழங்கினார் சசி தரூர்.

புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகள் விநியோகத்தில் காங்கிரசும், பாஜகவும் அரசியல் களங்களில் மோதிக் கொண்டிருக்க, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், பிரதமருக்கு மதிப்பு கொடுத்து தனது நூலை வழங்கியுள்ளார் சசி தரூர்.

sashi-tharoor-era-of-darkness