புதுடெல்லி – இந்திய மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மத்திய அரசு இன்று வியாழக்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றைச் செய்துள்ளது.
வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது 4500 ரூபாயிலிருந்து, 2000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார விவகாரத்துறைச் செயலாளர் சக்திகந்தா தாஸ் இன்று அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய கட்டுப்பாடு நாளை நவம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின்னர், மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வந்தனர்.
நாள் ஒன்றுக்கு 4,500 ரூபாய் வரையில் மாற்றுவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.