Home Featured இந்தியா இனி பழைய ரூபாய்களை எங்கே மாற்றலாம்? – ரிசர்வ் வங்கி ஆலோசனை!

இனி பழைய ரூபாய்களை எங்கே மாற்றலாம்? – ரிசர்வ் வங்கி ஆலோசனை!

982
0
SHARE
Ad

1000-rupees-noteபுதுடெல்லி – பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியைத் தவிர வேறு வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

எனினும், பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி வரும் டிசம்பர் 15-ம் தேதி வரையில், பெட்ரோல், எரிவாயு, குடிநீர், மின்கட்டணம், பள்ளிக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், வெளிநாட்டவர்கள் தங்களது கடப்பிதழைக் காண்பித்து வாரத்திற்கு 5000 ரூபாய் வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.