Home Featured இந்தியா ஏப் -1 முதல் பழைய 500,1000 ரூபாய் வைத்திருப்பது சட்டப்படி குற்றம்!

ஏப் -1 முதல் பழைய 500,1000 ரூபாய் வைத்திருப்பது சட்டப்படி குற்றம்!

780
0
SHARE
Ad

2500-and-1000-for-the-transfer-of-banknotes-deadline-on_SECVPFபுதுடெல்லி – வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பதோ அல்லது அதைப் பயன்படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதனை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகுல் ரோத்தகி கூறுகையில், “மத்திய அரசு இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது. கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது என தடைவிதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பலர் முதல் வகுப்பில் விமான டிக்கெட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். அதையும் அரசு கண்காணித்து வருகின்றது”

#TamilSchoolmychoice

“மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தால் வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்” என்று முகுல் தெரிவித்துள்ளார்.