Home Featured உலகம் நடிகையுடன் கள்ளக்காதல் பிரபல விளையாட்டு வீரர் மன்னிப்பு!

நடிகையுடன் கள்ளக்காதல் பிரபல விளையாட்டு வீரர் மன்னிப்பு!

726
0
SHARE
Ad

lin-danபெய்ஜிங் – ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற சீனாவைச் சேர்ந்த பிரபல பூப்பந்து விளையாட்டு வீரர் லின் டான், தனது மனைவி கர்ப்பமாக இருந்த சமயத்தில் பிரபல நடிகை ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

வெய்போ என்ற இணையதளத்தில் இன்று வியாழக்கிழமை துப்பறிவாளர் சாவ் என்பவர், தங்கும்விடுதி அறை ஒன்றில் லின் டான் பெண் ஒருவரை கட்டியணைப்பது போன்ற படத்தை வெளியிட்டிருந்தார்.

அது லின் டான் என்பதும், அப்படத்தில் இருக்கும் பெண், நடிகை சாவ் யாச்சி என்பதும் பின்னர் தெரியவந்தது.

#TamilSchoolmychoice

lin-dan1இந்நிலையில், அப்படங்களைப் பார்த்த லின் டானின் ரசிகர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

அதனையறிந்த லின் டான், வெய்போ இணையதளத்திற்கு அளித்த தகவலில், “ஒரு ஆணான நான், எந்த ஒரு காரணமும் சொல்லக் கூடாது. ஆனால் எனது நடத்தை எனது குடும்பத்தைப் பாதித்துள்ளது. அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு, லின் டானுக்கும் (வயது 33) ஷி சிங்ஃபாங் (வயது 35) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கருத்தரித்திருந்த லின் மனைவி ஷி சிங்ஃபாங், கடந்த நவம்பர் 5-ம் தேதி தான் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.