Home Featured நாடு பூப்பந்து : அரை இறுதிப் போட்டியில் லீ சோங் வெய் – லின் டான்!

பூப்பந்து : அரை இறுதிப் போட்டியில் லீ சோங் வெய் – லின் டான்!

1066
0
SHARE
Ad

Olympics-badminton-lee chong wei-

ரியோ டி ஜெனிரோ – இன்று புதன்கிழமை நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் லீ சோங் வெய் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் சீனாவின் லின் டான், இந்தியாவின் ஸ்ரீகாந்தைத் தோற்கடித்து, அரை இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளார்.

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, உலகின் மிகச் சிறந்த பூப்பந்து ஆட்டக்காரர்களாகத் திகழும், லீ சோங் வெய், லின் டான் இருவரும் மீண்டும் ஒருமுறை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பலப்பரிட்சை நடத்துகின்றனர்.

#TamilSchoolmychoice

வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் இந்த அரை இறுதி ஆட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே, பலமுறை இந்த இரு விளையாட்டு வீரர்களும் பல போட்டிகளில் மோதியிருக்கின்றனர். பூப்பந்து இரசிகர்களுக்கு இந்த இரு வீரர்களின் மோதல் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கப் போகின்றது என்பது மட்டும் நிச்சயம்!